மகா தீபத்திருவிழாவில் பங்கேற்க 6,000 பேருக்கு அனுமதி.... 


திருவண்ணாமலை கோயிலில் வரும் 10ம் தேதி நடக்கும் மகாதீபத்திருவிழாவில் பங்கேற்க 6 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 10ம் தேதி அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயர தீபமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பரணி தீபம் தரிசனத்திற்கு 4 ஆயிரம் பக்தர்களும், மகா தீபம் தரிசனத்திற்கு 6 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். அதேபோல், பொது தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் பரணி தீபத்திற்கு 2 ஆயிரம் பக்தர்களும், மகா தீபத்திற்கு 3 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் கோயிலுக்குள் அழைத்து வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கார் பார்க்கிங் வசதி 48 மணி நேரத்திற்கு முன்பு இணையதளம் திறக்கப்படும். இந்த ஆண்டு 1000 கார்கள் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 



Leave a Comment