மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்  கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்....


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்  கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழ் மாதம் தோறும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.


கார்த்திகை உற்சவ கொடியேற்றம் இன்று நடந்தது. சுவாமி சன்னதி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. சுந்தரேசுவரர்- மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் எழுந்தருளுகிறார்கள்.

10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் வருகிற 10-ந்தேதி செவ்வாய்கிழமை திருக்கார்த்திகை தீப விழா நடைபெறுகிறது. அன்று மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளம், அம்மன், சுவாமி சன்னதிகளில் லட்சத்தீபம் ஏற்றப்படும். திருக்கார்த்திகை அன்று இரவு சுவாமி, அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பாடாகி மாசிவீதியில் எழுந்தருளுகின்றனர்.



Leave a Comment