திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை "மகாதீப "திருவிழா கொடியேற்றம்.....
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா அதற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலைமேல் மகாதீபம் டிசம்பர் 10 ஆம் தேதி ஏற்றப்படுகிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீப திருவிழாவும் ஒன்று. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. விழாவையொட்டி முருகன் தெய்வானையுடன் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் முருகன் தெய்வானை சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது .தொடர்ந்து 10. 5 மணிக்கு முருகன் முன்னிலையில் விழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. கோவில் பட்டர்கள் ராஜா ரமேஷ் செல்லப்பா சிவானந்தம் சுப்பிரமணி உள்ளிட்டோர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிசம்பர் 9ஆம் தேதி மாலை 7 மணி அளவில் முருகனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும் தொடர்ந்து கார்த்திகை தீபம் டிசம்பர் 10ஆம் தேதி காலையில் முருகன் தெய்வானை எழுந்தருள தேரோட்டம் நடைபெறும்.
மாலையில் திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு மலைமீது மகாதீபம் ஏற்றப்படும் இதற்காக நேற்று திருப்பரங்குன்றம் கோவில் அலுவலகத்தில் 3 அடி உயரம் உள்ள தாமிர கொப்பரைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மலைமீது மகா தீபம் ஏற்ற கொப்பரை தயார் நிலையில் வைக்கப்பட்டது.
Leave a Comment