பழனி முருகன் கோவிலில் கணபதி ஹோமம்.... 


பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் துவங்குவதற்கு முன்பாக பாலாலய பூஜை வருகிற 2 ம் தேதி நடைபெற உள்ளது . அதற்கான கணபதி ஹோமம் பூஜைகளை கோயில் அர்ச்சகர்கள் துவங்கினர்.  

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். விழாக்காலங்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். புகழ்பெற்ற இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் 12 ஆண்டுகள் நிறைவடைந்தும் பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெறவில்லை. இதற்கிடையே கோவில் கோபுரத்தில் உள்ள சுதைகள், சிற்பங்கள், மண்டபத்தின் பல தூண்கள் சேதமடைந்து காணப்பட்டதால், பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் விரைவில் நடந்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
இந்தநிலையில் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பாலாலய பூஜை நாளை நடைபெற உள்ளது. முன்னதாக அதற்கான கணபதி ஹோமம் பூஜைகளை கோயில் அர்ச்சகர்கள் துவங்கினர்.  
 



Leave a Comment