ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ தத்தாத்ரேய ஜெயந்தி விழா.


இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 11.12.2019 புதன்கிழமை ஸ்ரீ தத்தாத்ரேயர் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ தத்தாத்ரேயர் ஹோமமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

குழந்தை வரம் தரும் தத்த குரு மும்மூர்த்திகளின் அம்சமாகப் போற்றப்படுபவர் தத்தாத்ரேயர். தான் கண்ட அனைத்திலுமே குரு உபதேசத்தை உணர்ந்தவர் அவர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், சந்திரன், சூரியன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, யானை, மான், மீன், நடனமாது, பருந்து, குழந்தை, தாதிப்பெண், பாம்பு, அம்பு எய்வோன், சிலந்தி, குளவி போன்றவை அவருக்கு உண்மையையும் தத்துவத்தையும் உணர்த்தின.

பூமியிலிருந்து பொறுமையையும், பிறருக்கு நன்மை செய்வதையும் அறிந்தார். தண்ணீரிடமிருந்து தூய்மையையும்; காற்றிடமிருந்து பற்றற்ற தன்மையையும்; தீயிடமிருந்து ஆத்ம ஞானம், தவத்துடன் கூடிய ஒளியுடன் பிரகாசிப்பது எப்படி என்பதையும் கற்றுக்கொண்டார். ஆகாயத்திடமிருந்து எங்கும் நிறைந்திருந்தாலும் எதனுடனும் தொடர்பற்று இருப்பதையும்; சந்திரனிடமிருந்து "ஆத்மா பூரணமானது- மாற்றமில்லாதது- குளிர்ந்தது' என்பதையும் அறிந்தார்.

சூரியனிடமிருந்து, மனித சரீரங்கள் மூலம் பிரதிபலிப்பதால் பிரம்மன் பலவாறு தோன்றுவதையும்; புறாவிட மிருந்து பாசமே பந்தத்திற்குக் காரணம் என்பதையும்; மலைப்பாம்பிடமிருந்து கிடைப்பதில் திருப்தியடைய வேண்டும் என்பதையும்; கடலிலிருந்து எந்த நிலையிலும் நிலை குலையாமல் இருப்பதையும்; விட்டில் பூச்சியிடமிருந்து ஆத்மாவில் எப்படி லயிப்பது என்பதையும்; வண்டி டமிருந்து குடும்பத்திற்கு பாரமாக இருக்கக்கூடாது என்பதையும்; தேனீயிடமிருந்து சிறுகச் சிறுக சேமித்து வைத்தாலும் இறுதியில் பயனற்றுப் போவதையும்; யானையிடமிருந்து காமத்தை விட்டுவிட வேண்டும் என்பதையும்; மானிடமிருந்து மயக்கும் இசையைக் கேட்கக் கூடாது  என்பதையும்; மீனிடமிருந்து உணவில் பேராசை கொண்டால் உடல்நலம் கெடும் என்பதையும் அறிந்தார்.

நடனமாதிடமிருந்து ஆசையை விட்டாலே திருப்தி ஏற்படும் என்பதையும்; பருந்திடமிருந்து "உலகப் பொருட்கள் மீதுள்ள பற்றை விட்டால் ஆனந்தமடைவதையும்; குழந்தையிடமிருந்து எப்பொழுதும் கபடு, சூது இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பதையும்; தாதிப் பெண்ணிடமிருந்து, தனிமையில் இருக்கவேண்டும் என்பதையும்; பாம்பிடமிருந்து தனக்கென  இருப்பிடம் கட்டாமல் கிடைக்கும் இடத்தில் வாழ்வதையும்; அம்பு எய்வோனிடமிருந்து ஆழ்ந்த மனஒருமைப்பாட்டையும்; சிலந்தியிடமிருந்து உலகாயத எண்ணங்கள் அனைத்தையும் விட்டுவிட வேண்டும் என்பதையும்; குளவியிடமிருந்து  ஆத்மாவில் தியானித்து ஆத்மனாகவே ஆகவேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டார்.

இத்தனை சிறப்பம்சம் கொண்ட ஸ்ரீ தத்தாத்ரேயர் விக்ரஹமானது, உலக மக்கள் அனைவரும் ப்ரார்த்தனை செய்து வாழ்வில் ஆசை துறந்து அன்போடு வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு நாள்தோறும் கூட்டுப்ரார்த்தனை செய்து வருகிறார் ஸ்வாமிகள்.

டிசம்பர் 11ம் தேதி புதன்கிழமை அன்று ஸ்ரீ தத்த ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் தத்தாத்ரேயர் ஹோமத்துடன் ஸ்ரீ தத்தாத்ரேயருக்கு பாலபிஷேகமும் நடைபெற உள்ளது. குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் மேற்கண்ட பூஜையிலும், அபிஷேகத்திலும் கலந்து கொண்டு அபிஷேக பாலை தத்த பிரசாதமாக பெற்று விறைவில் சந்தான பாக்யம் பெற்று ஆனந்தமாக வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
 



Leave a Comment