தனுசு ராசிக்காரர்கள் விவேகத்துடன் செய்லபட வேண்டிய டிசம்பர் மாதம் 


(மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)
தனுசு ராசியினரே இந்த மாதம் ராசியில் இருக்கும் சனி ஏதாவது  பிரச்சனைகளை  கொடுத்தாலும் ராசிநாதன் குருவால் அவை நல்லபடியாக தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும் எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் விவேகத்துடன் செய்வது நல்லது. நீண்ட நாட்களாக தீட்டி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும்.

பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். பங்குதாரர்களிடம் வீண் மனக்கசபு ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. மேலிடத்துடன் இணக்கமான சூழ்நிலை இருக்கும்.


குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும்.  கணவன் மனைவிக்கிடையே இருக்கும் இறுக்கமான சூழ்நிலை அகலும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. சோம்பல் குறைந்து உற்சாகம் ஏற்படும்.
பெண்களுக்கு எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். 


கலைத்துறையினருக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கையில் காசு புரளும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். நண்பர்கள் உறவினர்களின் உதவி கிடைக்கும்.


அரசியல்துறையினருக்கு கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் மனோபயம் குறையும். திடீர் கோபம், வேகம் இருக்கலாம். வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம்  அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது  காரிய வெற்றிக்கு உதவும். 
மாணவர்களுக்கு கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். 

பரிகாரம்: சித்தர்கள் சன்னிதிக்குச் சென்று வணங்க மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16
 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
Mobile/WhatsApp: +91 7845119542

 



Leave a Comment