விருச்சிகம் ராசிக்கு டிசம்பர் மாதம் பணவரத்து மனமகிழ்ச்சியை தரும்


(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
விருச்சிக ராசியினரே இந்த மாதம் எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரணகோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவரை  நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை.


தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை  தாண்டி முன்னேறுவீர்கள். லாபாதிபதி புதனும் ராசிநாதன் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள். லாபத்திற்கு குறைவிருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும்/

குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.  நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். 


கலைத்துறையினருக்கு பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். ராசியில் சஞ்சரிக்கும் சூரியனால் எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு  ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரம் வாக்கு வன்மை தரும். 


அரசியல்துறையினருக்கு நீங்கள் ஏற்பாடு செய்த காரியங்கள் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். வேலை பளு, வீண் அலைச்சல் குறையும். 
மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும். 

பரிகாரம்:  மாரியம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வேப்பிலை அர்ப்பணித்து தீபம் ஏற்றி வணங்க முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 13, 14
 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
Mobile/WhatsApp: +91 7845119542

 



Leave a Comment