கன்னி ராசிக்கு டிசம்பர் மாதம் காரிய தடை நீங்க


(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
கன்னி ராசியினரே இந்த மாதம் பணவரவு வரும். ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள்  வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. ஆவனங்களை முறையாக கவனித்து வாங்குவது சிறந்தது. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டிய வரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.


தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவதுபடி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம். அலுவலகத்தில் யாருக்கும் ஆதரவாகவோ எதிராகவோ நிலையினை எடுக்காதீர்கள்.


குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும். வம்பு வழக்குகள் உங்களைத் தேடி வரலாம்.


பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன்  பகை ஏற்படலாம். ஆனாலும் ராசிநாதன் சஞ்சாரம் ராசிக்கு மூன்றில் இருப்பதால் சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். 


அரசியல் துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழிலில் இருந்த போட்டிகள் குறையும். புதிய பொறுப்புகள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். சிறிது டென்ஷனும் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு  கல்வி தொடர்பான செலவு கூடும்.  கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம்.

பரிகாரம்:  ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர காரிய தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும். 
சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10
 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
Mobile/WhatsApp: +91 7845119542

 



Leave a Comment