தஞ்சை பெரியகோவில் விரைவில் கும்பாபிஷேகம்?


தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த கோவிலில்  24 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இதற்கான பணிகளை தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. கோவில் வளாகத்தில் சிதிலமடைந்த தரைதளம் சீரமைக்கும் பணி, திருச்சுற்று மண்டபங்கள் சீரமைக்கும் பணிகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

யாகசாலை நடைபெறும் இடங்கள், பொதுமக்கள் கோவிலுக்குள் வந்து செல்வதற்காக அமைக்கும் பாதை, முக்கிய பிரமுகர்கள் வரும் வழி ஆகியவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். 



Leave a Comment