திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நவ.23 பிரம்மோற்சவம் தொடங்குகிறது...
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் 23 ஆம் தேதி பிரம்மோற்சவ விழா தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது. டிசம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பிரம்மோற்சவ திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேதோட்டம் நவம்பர் 30 ஆம் தேதி அன்று நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.
திருமலை திருப்பதியில் கோயில்கொண்டிருக்கும் வேங்கடேசப் பெருமாள், புரட்டாசி மாதத்தில் பிறந்ததால் அந்த மாதத்தில் பிரம்மோற்சவ விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். திருமலையில் நடப்பதைப் போன்றே திருச்சானூர் எனப்படும் அலர்மேலு மங்காபுரத்தில் கோயில்கொண்டிருக்கும் பத்மாவதி தாயார், கார்த்திகை மாதத்தில் பிறந்ததையொட்டி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.
திருச்சானூர் பிரம்மோற்சவ விழா 23-ம் தேதி தொடங்கி, டிசம்பர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்....
நவம்பர் 23 - துவஜாரோகணம், சிறிய சேஷ வாகனம்.
நவம்பர் 24 - பெரிய சேஷ வாகனம்.
நவம்பர் 25 - முத்துப்பந்தல், சிம்ம வாகனம்.
நவம்பர் 26 - கற்பக விருட்ச வாகனம், அனுமந்த வாகனம்.
நவம்பர் 27 - முத்துப் பல்லக்கு, கஜ வாகனம்.
நவம்பர் 28 - சர்வ பூபால வாகனம், கருட சேவை.
நவம்பர் 29 - சூரியபிரபை வாகனம், சந்திரபிரபை வாகனம்.
நவம்பர் 30 - திருத்தேர், குதிரைவாகனம்.
டிசம்பர் 1 - சக்கரஸ்நானம்.
டிசம்பர் 2 - புஷ்பாஞ்சலி.
Leave a Comment