திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் வருமானம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நடந்து முடிந்த நிலையில் நவம்பர் மாத உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 32 லட்சத்து 88 ஆயிரத்து 181 ருபாய் கிடைத்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நிறைவடைந்த நிலையில் நவம்பர் மாதத்திற்கான உண்டியல் எண்ணிக்கை கோவிந்தம்மாள் மண்டபத்தில் இன்று நடந்தது. செயல் அலுவலர் அம்ரித் தலைமையில் இன்று நடந்தது. சிவகாசி பதினென்னு சித்தர் மடம் பீடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர்.
நவம்பர் மாதத்திற்கான உண்டியல் காணிக்கையில் 2 கோடியே 32 லட்சத்து 88 ஆயிரத்தி 171ரூபாய் மொத்தம் கிடைத்தது. இதில் கோசாலை உண்டியலில் ரூ. ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 35 ரூபாயும், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ. ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 398 ரூபாயும், கோயில் அன்னதான உண்டியலில் ரூ. 11 லட்சத்து ஆறாயிரத்து 374 ரூபாயும், சிவன் கோயில் அன்னதான உண்டியலில் ரூ. 8 ஆயிரத்து 930 ரூபாயும் அடங்கும்.
மேலும் தங்கம் 1750 கிராமும், வெள்ளி 14720 கிராமும் கிடைத்தது. இதில் வெளிநாட்டு கரன்சி தாள்கள் 444 ம் காணிக்கையாக கிடைத்தன.
Leave a Comment