பழனி முருகன் கோயிலில்.... டிசம்பர் 2 ஆம் தேதி கும்பாபிஷேகம்..... 


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3 ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலில் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் 12 ஆண்டுகள் நிறைவடைந்தும் பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெறவில்லை. 

இந்தநிலையில் பக்தர்களின் கோரிக்கைக்கு இணங்க வருகிற 2 ஆம் தேதி குமபாபிஷேகம்  நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், வருகிற 2-ந்தேதி பாலாலய பூஜை நடைபெற்று, அதன்பின்பு மலைக்கோவிலில் உள்ள அனைத்து இடங்களிலும் திருப்பணிகள் தொடங்கப்படும்.

இந்துசமய அறநிலையத்துறை திருப்பணிக்குழு ஸ்தபதிகள், பொறியாளர்கள், தொல்லியல் துறை அதிகாரிகள் கோவிலில் திருப்பணிகளை மேற்கொள்வார்கள் என்றார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர். 



Leave a Comment