சரண கோஷம் முழங்க.... மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு....


மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. சுவாமியே சரணம் அய்யப்பா என்ற சரணகோஷம் முழங்க, சபரிமலை நடை திறக்கப்பட்டது. 

கார்த்திகை முதல் தேதி துவங்கி 41 நாட்கள் தொடர்ச்சியாக பூஜை நடைபெறும் காலம் மண்டல காலம். இந்த பூஜைக்காக இன்று சபரிமலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி சரணகோஷம் முழங்க, நடை திறந்து விளக்கேற்றினார்.  நடைதிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளுக்குப் பிறகு 18-ம் படிக்கு கீழே உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்பட்டது. 

நாளை காலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றியதும் மண்டலகாலம் தொடங்கும். தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். பின்னர் கணபதி ஹோமம் நடைபெறும். தொடர்ந்து உச்சபூஜை, புஷ்பாபிஷேகம், தீபாராதனை, அத்தாழ பூஜைகள் நடைபெறும். மதியம் உச்சபூஜைக்கு முன்னோடியாக களபாபிஷேகம் நடைபெறும்.
 



Leave a Comment