சபரிமலையில் பக்தர்கள் வருகைக்காக சிறப்பு ஏற்பாடுகள்... 


சபரிமலை ஐய்யப்பன் கோயில் மண்டல மற்றும் மகர விலக்கு பூஜைக்காக வரும் 16 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்தநிலையில் பக்தர்கள் வசதிக்காக சபரி மலையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. பக்தர்களின் வருகை அதிகமானால், தரிசனத்திற்கு வசதியாக கோவில் நடை திறக்கப்படும் நேரங்களில் மாறுதல் செய்யப்படும்.

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு, சபரிமலையில் இந்த ஆண்டு கூடுதலாக அரவணை மற்றும் தேவைக்கு ஏற்றவாறு அப்பம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பம்பை, சன்னிதானத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது.

பிளாஸ்டிக் பாட்டில்களில் வினியோகம் செய்யப்படும் குடிநீருக்கு சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், இப்பகுதிகளில் பக்தர்களின் வசதிக்காக தினசரி 3½ லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரும், 1½ லட்சம் லிட்டர் சுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. 

சபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளதால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கடந்த ஆண்டை போல், 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா தெரிவித்து உள்ளார்.



Leave a Comment