மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு.... 


உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் மேற்கொள்ள வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக இலவச லட்டு வழங்கும் திட்டதினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனத்திற்காக  நாள்தோறும் சராசரியாக 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை  வருகை தருகின்றனர். அம்மன் சன்னதியில் தரிசனம் முடித்து வரும் வழியில் உள்ள கூடல் குமரன் சன்னதி பிரகாரத்தில் வைத்து லட்டு வழங்கப்படுகிறது. .

தீபாவளி முதல்  லட்டு வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் கடந்த செப்டம்பர் 12ம் தேதி  அறிவித்த நிலையில் லட்டு தயாரிப்பிற்கான சோதனை ஓட்டமும் உட்கட்டமைப்பு பணிகளும் நடைபெறுவதால் தீபாவளிக்கு பின்னர் ஒரு தேதியில் லட்டு வழங்கும் திட்டம் துவங்கும் என பின்னர் அறிவித்தது.
  
லட்டு தயாரிக்கும் பணி அம்மன் சன்னதிக்கு வலதுபுறம் உள்ள மடப்பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது.   லட்டு தயாரிப்பு பணியில் 15 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். லட்டு தயாரிப்பிற்காக ஒரு பிரத்தியோகமான லட்டு உருட்டு இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

நேர்த்தியான சுவையுடன் 30 கிராம் எடை கொண்ட லட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.நாள்தோறும் 20ஆயிரம் லட்டு தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மீனாட்சியம்மன் கோவில்  நிதியிலிருந்து லட்டு வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் வருகை அதிகரிப்பிற்கு ஏற்ப கூடுதலாகள லட்டு தயாரிப்பதற்காண பணிகள் மேற்கொள்ளப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 



Leave a Comment