திருத்தணி முருகன் கோயில் கந்த சஷ்டி புஷ்பாஞ்சலி விழா..... வீடியோ காட்சி


திருத்தணி, முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆறுமுக சுவாமியை வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் 5ஆம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயில் கந்த சஷ்டி விழா கடந்த 28 ஆம் தேதி தொடங்கி 7 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 

ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளான இன்று சூரசம்ஹாரம் நடைபெறும், ஆனால் திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும். காலை 11 மணிக்கு மலைக்கோயில் உள்ள மூலவ முருகப்பெருமானுக்கு தங்க கவசமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 

மாலை 4.30 மணிக்கு முருகன் கோயிலின் உபக்கோயிலான அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் திருக்கோயில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்களை கோயில் ஊழியர்கள் மற்றும் முருக பக்தர்கள் ஊர்வலமாக சரவணப்பொய்கை வழியாக மலைக்கோயிலுக்கு கொண்டுவந்தனர். 

பின்னர் காவடி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த சண்முக பெருமானுக்கு அனைத்து வகையான மலர்களால் புஷ்பாஞ்ச- மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஆந்திரா, சென்னை, அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
 



Leave a Comment