உலகத்திலே உயரமான முருகன் சிலை.... கும்பாபிஷேகத்துக்கு தயாராகிறது....
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில் 145 அடி உயரத்தில் முருகன் சிலை மிக பிரமாண்டமான அளவில் கடந்த 3 ஆண்டுகளாக மேலாக கட்டும் பணி உருவாகி வருகிறது இந்த சிலை மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பத்து மலை முருகன் கோயில் உள்ளது அதன் நுழைவாயிலில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை என்று அமைக்கப்பட்டுள்ளது அதன் உயரம் 140 அடி ஆகும்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கும் பணி கடந்த மூன்றாண்டு காலமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த முருகன் சிலை 145 அடி உயரம் கொண்டு உள்ளது சிலை மட்டும் 126 அடியும் பீடத்துடன் சேர்ந்த மொத்தம் 145 அடியில் உலகில் மிக உயரமான முருகன் சிலை சிலையாக இது அமைகிறது என்று கோவில் சிலையை நிறுவி வரும் ஸ்ரீதர் என்பவர் தெரிவித்தார்
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பத்துமலை முருகன் சிலையை ஆரம்பித்து அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது அடுத்த ஆண்டு அதாவது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்
மலேசியாவில் உள்ள முருகன் சிலையை வடிவமைத்த தமிழகத்தைச் சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் சபதி தலைமையிலான குழுவினர் இந்த சிலையையும் தற்போது வடிவமைத்து முழுவீச்சில் வேலைப்பாடு செய்து வருகின்றனர்
சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையம் இந்த சிலை கோவில் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
Leave a Comment