தாளவாடி அருகே சாணியடிக்கும் விநோத திருவிழா


ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா நடைபெற்றது. தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை முடிந்து நான்காவது நாள் சாணியடிக்கும் திருவிழா இக்கோயிலில்  நடைபெறுகிறது. 

ஒருநாள் மாட்டு வண்டி குப்பைமேட்டின் மீதேறிச்செல்லும்போது ஒரு இடத்தில் ரத்தம் வழிந்துள்ளது. உடனே இதைக்கண்ட மக்கள் அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் இருந்தது தெரிய வந்தது. அப்போது ஒரு சிறுவன் கனவில் திபாவளி முடிந்து நான்காவது நாள் சாணத்திலிருந்து வந்ததன் நினைவாக சாணியடி திருவிழா நடத்த வேண்டும் என கடவுள் கூறியதாகவும், அதனடிப்படையில் ஆண்டு தோறும் இத்திருவிழா நடைபெறுவதாகவும், கும்டாபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர். 

விழாவை ஒட்டி ஊரில் உள்ள அனைத்து பசுமாட்டு சாணங்கள் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு சிறுவர்கள் ஒருவர் மீது சாணியடித்து விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் 2 மணிக்கு அருகே உள்ள குளத்திலிருந்து சுவாமி அழைப்பு நடைபெற்றது. 

ஊர்ப்பெரியவர்கள் முன்னிலையில் நடைபெற்ற சுவாமி அழைப்பு நிகழ்ச்சியில் தாரை தப்பட்டைகள் முழங்க கழுதை மேல் சுவாமி கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. பின்னர் 3 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பீரேஸ்வரருக்கு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் ஊர்ப்பொதமக்கள் அனைவரும் வெற்றுடம்புடன் கோயிலுக்கு பின்புறம் கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை உருண்டைகளாக செய்து ஒருவருக்கொருவர் மீது அடித்து மகிழ்ந்தனர்.

 

சுமார் 2 மணி நேரம் சாணியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அனைவரும் குளத்தில் நீராடிவிட்டு கோயிலுக்கு சென்று பீரேஸ்வரரை வழிபட்டனர். இவ்விழா குறித்து ஊர்ப்பெரியவர் ஒருவர் கூறியதாவது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை ஒருவர் எடுத்துச்சென்று சாணங்கள் சேகரிக்கும் குப்பைமேட்டில் எறிந்துவிட்டார். 
 



Leave a Comment