சிக்கனத்தை கடைபிடிக்கும் விருச்சிக ராசி நேயர்களுக்கு குரு பெயர்ச்சி பலன்கள்


(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

வார்த்தைகளை அளந்து பேசுவது போல செலவு செய்வதிலும் சிக்கனத்தை கடைபிடிக்கும் விருச்சிக ராசியினரே, எல்லோரிடமும் கண்டிப்பும் கட்டாயமும் உடையவர். நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர்.துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர்.

கிரகநிலை:
இதுவரை உங்களது ராசியில் இருந்த குருபகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து உங்களது ரண ருண ரோக - அஷ்டம ஸ்தானம் - தொழில் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு அஷ்டம ஸ்தானத்திலும், கேது மற்றும் சனி தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். 

தனவாக்கு குடும்பஸ்தானத்திற்கு மாற்றம் பெற்றிருக்கும் குருபகவானால் நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம்.  பணவரத்து திருப்திகரமாக  இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம்  அதிகரிக்கும்.  யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் இருக்கும் கவலைகளை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகுவீர்கள். காரிய தடங்கல்கள் உண்டாகி நீங்கும்.  நற்பலன்கள் உண்டாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த  காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள் பெறவும், வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மற்றவர்களுக்காக பொறுப்புகள் ஏற்கும் போது மிகவும் கவனமாக  இருப்பது வீண்பழி  ஏற்படாமல் தடுக்கப்படும்.   அனுபவபூர்வமான அறிவுதிறன் கூடும். முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.  பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும்.உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். சந்தோஷமான நிலை காணப்படும். 

பெண்களுக்கு மற்றவர்கள்  உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழு பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.

விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். இதனால் கொள்முதல் பொருட்களை விற்று நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். நெருங்கியவர்களுக்கு அரிய உதவிகளைச் செய்து கௌரவம் அடைவீர்கள். உங்கள் சிந்தனையில் தெளிவு பிறக்கும். செயலில் வேகம் அதிகரிக்கும். புதிய நிலங்களை வாங்குவதற்குக் கடன் கிடைக்கும். உங்கள் கழனியில் வேலை செய்யத் திறமையான ஆட்கள் கிடைப்பார்கள். 


அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். எதிரிகளின் ரகசியத் திட்டங்களை அம்பலப்படுத்திப் புகழடைவீர்கள். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப்பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். 


கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். 

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும். தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின்  ஆதரவும் கிடைக்கும்.


விசாகம் 4ம் பாதம்: 
இந்த குரு பெயர்ச்சியால் எத்தனை தடைவந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் பின்வாங்க மாட்டீர்கள். எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும்.  நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள்  சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். 

அனுஷம்: 
இந்த குரு பெயர்ச்சியால் தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

கேட்டை:
இந்த குரு பெயர்ச்சியால் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவீர்கள். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். வீண், வறட்டு கௌரவத்துக்காக சேமிப்புகளை கரைத்துக்கொள்ள வேண்டாம். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமளவுக்குப் பிரபலமாவார்கள். நல்ல வாய்ப்புகள் வரும். உங்கல் முன்னேற்றத்திற்கு பாதை வகுக்கும் காலமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். 


பரிகாரம்: முடிந்த போதெல்லாம், அல்லது செவ்வாய் கிழமைகளில் மட்டுமாவது துர்க்கையம்மனை வழிபடவும். நவகிரகப் பிரதட்சிணம் செய்யுங்கள்; நன்மைகள் பெருகும். 
சொல்ல வேண்டிய மந்திரம்: ஸ்ரீ துர்கா ஸகஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ துர்கா ஸூக்தம் சொல்வது நன்மையைத் தரும்.
மலர் பரிகாரம்: “செம்பருத்தி மலரை” அம்மனுக்கு ராகுகாலத்தில் படைத்துவர மனதில் தைரியம் பளிச்சிடும். 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
 

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
Mobile : +91 7845119542



Leave a Comment