ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் ரூ.1.4 கோடி உண்டியலில் காணிக்கை....வீடியோ காட்சி
புகழ்பெற்ற ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் 1.4 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சைவ திருத்தலமான ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோவிலில் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் நேற்றுவரை சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் செலுத்திய 28 நாட்கள் உண்டியல் காணிக்கை இன்று எண்ணப்பட்டது.
இந்த உண்டியல் காணிக்கை மூலம் 1 கோடியே 4 லட்சத்து 30 ஆயிரத்து 929 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இதில் தங்கம் 83 கிராம், வெள்ளி 398 கிலோ 850 கிராம் செலுத்தியிருந்தனர். இது தவிர வெளிநாட்டு கரன்சிகள் 68 நோட்டுகள் இருந்தது. இதில் யுஎஸ்ஏ 15 , மலேசியா 20, யூ.ஏ.இ.5, சிங்கப்பூர் 4 , ஓமன் 5 , சவுதி அரேபியா 4, கத்தார் 3, தென்னாப்பிரிக்கா 4, நேபாள் 4 இதர நாட்டை சேர்ந்த 2 நோட்டுகள் இருந்தது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Comment