சபரிமலையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்....
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டபிறகு நிர்மால்ய தரிசனம், நெய் அபிஷேகம் உள்பட விசேஷ பூஜைகள் நடைபெற்றது. ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். நீண்ட வரிசையில் காத் திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
சபரிமலையில் உள்ள புனித நதியான பம்பை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் பக்தர்கள் பாதுகாப்பாக நீராடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். அந்த பகுதியில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
வருகிற 22-ந்தேதி வரை கோவில் நடை திறந் திருக்கும். அன்று இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். சித்திரை திருநாள் ஆட்ட திருவிழாவையொட்டி மீண்டும் வருகிற 26-ந்தேதி மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 27-ந்தேதி விசேஷ பூஜைகளுக்கு பிறகு அன்று இரவு நடை அடைக்கப்படும்.
அதைத்தொடர்ந்து பிரசித்திபெற்ற மண்டல பூஜைக்காக அடுத்த மாதம் 16-ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்.
Leave a Comment