திருச்செந்தூரில் சூரசம்ஹார ஏற்பாடுகள் தீவிரம்.....
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா வருகின்ற 28 ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 2ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழகம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த திருவிழாவின் பக்தர்களுக்காக அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது இது பற்றி கோவில் செயல் அலுவலர் அம்ரித் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
கந்த சஷ்டி திருவிழாவின் போது விரதமிருந்து பக்தர்களுக்கு 9 இடங்களில் தற்காலிக கொட்டைகள் அமைக்கப்படுகிறது. தற்போது 5 இடங்களில் கொட்டைகள் அமைக்கும் பணிகள் மும்மரமாக நடைபெற்றுவருகிறது.
இதில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் கழிப்பிடம் வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார், மேலும் கோவிலில் உள்ள 7 விடுதிகளிலும் பாராமரிப்பு பணிகள் முழு விச்சில் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது..
பக்தர்களின் கோரிக்கை ஏற்று சூரசம்ஹாரம் நடைபெற்ற பின்பு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதலாக கார் பார்கிங் வசதி அமைத்து சூரசம்ஹாரம் நடைபெற்ற பின்பு வாகனங்கள் தனியே செல்வதற்கு தனி வழிகள் ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் சுகாதார பணியில் தற்போது 350 தற்காலிக பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் திருவிழாவின் போது கூடுதலாக 100 பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தார். மேலும் கந்த சஷ்டி திருவிழாவின் போது பக்தர்களுக்குகான குடிநீர், கழிப்பிடம் போன்ற வசதிகள் மிகவும் சிறப்பாக செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Leave a Comment