திருப்பரங்குன்றம் கந்த சஷ்டிவிழா.... அக்டோபர் 28 காப்புக்கட்டுதல் 


திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 28-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்க உள்ளது. 

நவம்பர் மாதம் மூன்றாம் தேதி வரை 7 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 
அக்டோபர் 28 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் எழுந்தருளும் சுப்பிரமணியசாமிக்கும், சண்முகர் சன்னதியில் எழுந்தருளும் தெய்வானை மற்றும் வள்ளி சமேத சண்முகப்பெருமானுக்கும் காப்புக்கட்டுதல் நடக்கிறது.

 விழாவையொட்டி கோவிலுக்குள் தினமும் காலை 11 மணி அளவிலும், மாலை 5 மணி அளவிலும் சண்முகார்ச்சனை நடைபெறும். இதேபோல் தினமும் இரவு 7 மணி அளவில் உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக அடுத்த மாதம் 1-ந்தேதி இரவு 7 மணி அளவில் கோவிலுக்குள் ஆலய பணியாளர் திருக்கண்ணில் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், மறுநாள் 2-ந்தேதி மாலை 5.30 மணி அளவில் சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில் முன்பு சூரசம்கார லீலையும் நடைபெறும்.
 



Leave a Comment