திருப்பதியில் இன்றும் சர்வ தரிசம் மற்றும் திவ்ய தரிசனம் ரத்து.....
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதம் மற்றும் வார விடுமுறையையோட்டி பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து இருப்பதால் நாளை திங்கட்கிழமையும் சர்வ தரிசனம் மற்றும் திவ்ய தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதம் மற்றும் விடுமுறையையொட்டி கடந்த இரண்டு நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சாதாரணமாக நாளொன்றுக்கு திருமலைக்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வருவது வழக்கம் ஆனால் புரட்டாசி மாதம் என்பதாலும் தொடர் விடுமுறை காரணத்தாலும் அதிக அளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர். திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்கும் விடுதிகளுக்காக 5 மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
அதே போல் தலை முடி காணிக்கை செலுத்த 3 மணி நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர். அதேபோல் இலவச தரிசனத்திற்காக 24 மணி நேரமும் ஆன்லைன் மூலம் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட பெற்ற பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. தொடர்ந்து மழை மற்றும் குளிர் காற்று வீசி வரும் நிலையில் குழந்தைகள் மூத்த குடிமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் இருப்பதால் நாளை திங்கட்கிழமையும் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசனம், ஆதார் அடையாள அட்டை மூலம் வழங்கப்படும் சர்வ தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை ஒரே நாளில் ஒரு லட்சத்து 1371 பேர் சுவாமி தரிசனம் செய்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 64 ஆயிரத்து 654 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் ரூ 3.44 கோடி பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.
Leave a Comment