அய்யா வைகுண்ட தர்மபதி  கோயில் தேர்த்திருவிழா.... வீடியோ காட்சி


சென்னையை  அடுத்து மணலி புதுநகரில் மும்மூர்த்திகளின் வடிவான அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் 10ம் நாள் உற்சவம் நிறைவு நாளான இன்று தேர் திருவிழா   வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் தேரை   வடம்பிடித்து தேர் இழுத்தனர். 

மணலி புதுநகரில்  அய்யா கோவிலில் கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரமோற்சவதின்  கடைசி நாளான 10 ம்  நாள் உற்சவத்தில்   திருத்தேர் விழா  நடைபெற்றது தினம் ஒரு நிகழ்வாக  பத்து நாட்களும்  அய்யா வைகுண்ட தர்மபதி காளை வாகனம் ,அன்ன வாகனம்,  கருட வாகனம், மயில் வாகனம், அஞ்சநேயர், குதிரை வாகனம்,  உள்ளிட்ட  வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு சாமி ஊர்வலமாக வீதி உலா நடைபெற்றது. 

இதனையடுத்து கடைசி நாளான இன்று    36 டன் எடை  36 அடி உயரமுள்ள தேரில் அய்யா வைகுண்ட தர்மபதியை  வாசனை புஷ்பத்தினால் அலங்கரிக்கப்பட்டு  பக்தர்கள் புடைசூழ  மணலி புதுநகர் முழுவதும் வீதி உலா நடைபெற்றது. 

இந்த பிரமாண்ட தேரை    சமத்துவ மக்கள் கழக  தலைவர் நாராயணன்  வடம் பிடித்து தொடங்கி வைத்தார் . இதனையடுத்து அய்யா உண்டு என்ற நாமத்தை பாடியபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர் 

அய்யா கோவில் பிரமோற்வத்தின்  கடைசி   நாளான தேர் திருவிழாவை காண சென்னை புறநகர் பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வந்து  குவிந்ததால் மணலி புதுநகர் முழுவதுமே திருவிழா கோலம் பூண்டுள்ளது 

அய்யா வைகுண்ட தர்மபதி  கோவில் அமைந்த இடங்களிலேயே மிகப்பெரிய தேர் இருக்கும் இடம் என்ற சிறப்பைபெற்ற மணலி புதுநகர் என்பதனால் தேர் திருவிழாவை காண வெளி மாவட்டங்களில் இருந்து நேற்று இரவே தங்கி   எராளமான பக்தர்கள் குவிந்ததால் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.  
 



Leave a Comment