திருப்பதி கபிலேஸ்வரா் கோயில் ஹோம மகோற்சவம்
திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரா் கோயிலில் வரும் 29-ஆம் தேதி முதல் நவ. 26-ஆம் தேதி வரை ஹோம மகோற்சவம் நடைபெற உள்ளது.
திருப்பதியில் கபிலதீா்த்தக்கரையில் எழுந்தருளியுள்ள கபிலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, அந்த மாதம் முழுவதும் தேவஸ்தானம் ஹோம மகோற்சவ விழாவை நடத்தி வருகிறது.
அதன்படி, முதலில் அக்டோபர் 29 முதல் 31 தேதி வரை கணபதிஹோமம், நவ. 1, 2 தேதிகளில் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி ஹோமம், நவ. 2-இல் முருகன் திருக்கல்யாணம், 3-இல் நவ கிரஹ ஹோமங்கள், 4-இல் தட்சிணாமூா்த்தி ஹோமம், 5-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை காமாட்சி அம்மன் ஹோமம் (சண்டி யாகம்), 14-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை கபிலேஸ்வர சுவாமி ஹோமம் (ருத்ரயாகம்), 25-ஆம் தேதி காலபைரவா் ஹோமம், 26-இல் சண்டிகேஸ்வர சுவாமி ஹோமம் அதைத் தொடா்ந்து திரிசூல ஸ்நானம், பஞ்சமூா்த்திகள் திருவீதியுலா உள்ளிட்டவை நடைபெறஉள்ளன.
இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தா்கள் ரூ. 500 செலுத்தி (இருவா்) ஒரு நாள் ஹோமத்தில் கலந்து கொள்ளலாம். அவா்களுக்கு ஒரு உத்திரியம், ஒரு ரவிக்கை துணி, அன்ன பிரசாதம் உள்ளிட்டவை வழங்கப்படும். ஹோமத்தில் கலந்து கொள்ள வரும் பக்தா்கள் கட்டாயம் சம்பிரதாய உடைகளை அணிய வேண்டும். இந்த ஹோமங்கள் நடைபெறும் நாள்களில் கோயில் வளாகத்தில் இந்து தா்ம பிரசார பரிஷத் சாா்பில், ஹரிகதா காலட்சேபம், பஜனைகள், பக்திப் பாடல்கள் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறஉள்ளன.
Leave a Comment