ஐப்பசி மாத பூஜைக்கு சபரிமலை நடை அக்.17 திறப்பு.....


 ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அக்டோபர் மாதம்  17-ந்தேதி திறக்கப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடைபெறும். 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை.

இந்த நாட்களில் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

 இதுதவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதம்) முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். இந்த நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துவார்.

18-ந் தேதி முதல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. 22-ந் ேததி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.



Leave a Comment