முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நிறைவு.....
உலகப்புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நிறைவாக விரதமிருந்து மாலையணிந்த பக்தர்கள், காப்பு களைந்து மாலையை கழற்றி உண்டியலில் காணிக்கை செலுத்தி விரதத்தை நிறைவு செய்தனர்.
திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த செப்டம்பர் மாதம் 29 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இத்திருவிழாவிற்காக பல லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து காப்பு கட்டி காளி அம்மன் சிவன் கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு வகையான வேடங்கள் ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து அதனை கோவில் உண்டியலில் செலுத்தி அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மிக பிரமாண்டமாய் நடைபெற்ற இத்திருவிழா வின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூரனை வதம் செய்யும் நிழ்ச்சியா மகிஷாசூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதனையடுத்து சப்பரத்தில் வீதி உலா சென்ற முத்தாரம்மன் திருக்கோயிலை வந்தடைந்தார். பின்னர் கொடியிறக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அம்மனுக்கு திருகாப்பு அவிழ்க்கப்பட்டது. தொடர்ந்து கோவில் பட்டர் பக்தர்களுக்கு காப்பு அறுத்து மாலையை கழற்றினார். இந்த திருவிழாவின் பக்தர்கள் தர்மம் எடுத்த பணத்தை காணிக்கையாக உண்டியல்கள் செலுத்தினர். இதில் பல உண்டியல்கள் நிரம்பியது. இந்த தசரா திருவிழா நிறைவு பெற்றது.
Leave a Comment