திருப்பதியில் 8 நாட்களில் 7,07,737 பேர் தரிசனம்


திருப்பதியில் பிரம்மோற்சவம் நடைபெற்ற 8 நாட்களில் 7 லட்சத்து 7,737 பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர்.

தேவஸ்தான செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால் செய்தியாளர்களுக்கு  அளித்த  பேட்டியில் கூறுகையில்  ஏழுமலையான் கோயிலில் கடந்த ஆண்டு பிரம்மோற்சவத்தின் 8 நாட்களில் மூலவரை 5 லட்சத்து 90,584 பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். 

இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தின் 8 நாட்களில் 7 லட்சத்து 7737 பக்தர்கள் தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ரூ 20.40 கோடி  காணிக்கை செலுத்தினர்.

பிரம்மோற்சவத்தில் பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் இருக்க 8 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டதால்  34 லட்சத்து  1384 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 3 லட்சத்து 23 ஆயிரம் பக்தர்கள் மெட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 

18 மாநிலங்களை சேர்ந்த 357 கலைக்குழுவினர் 8210 பேர் சுவாமி வீதி உலாவின் போது கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். இதே போன்று அடுத்த ஆண்டு 25 மாநிலங்களில் இருந்து பக்தர்களை வரவழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Leave a Comment