திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அம்பு போடும் விழா.....
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நவராத்திரி 10 நாள் திருவிழாவாக பசுமலையில் அம்பு போடும் விழா நடைபெற்றது,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி தெய்வானையுடன் மாலை 6 மணிக்கு சர்வ அலங்காரத்தில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி பசுமலையில் உள்ள அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அங்கு யாகம் வளர்க்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை,புன்னியவாசனம், பாசுபதஸ்திர ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு, வண்ணி மரத்தடியில் பால், எண்ணை உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து எட்டு திக்கும் பலி கொடுக்கப்பட்டு, சுவாமி பாதத்தில் வில் அம்பு வைக்கப்பட்டு நான்கு திசைகள் மற்றும் மேல் நோக்கி அம்பு போடப்பட்டது.
இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். சுப்பிரமணிய சுவாமிக்கு வழி எங்கிலும் திருக்கண் அமைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
Leave a Comment