கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்திக் எட்டாவது நாளான் இன்று கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி பாயும் தங்க குதிரையில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கலியுகத்தில் துஷ்ட சக்திகளை வதம் செய்வதற்காக பாயும் தங்க குதிரை மீது பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று இரவு மலையப்ப சுவாமி கல்கி அவதாரத்தில் நான்கு மாடவீதியில் பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான நாளை காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. திருமலையில் வராஹ சுவாமி கோயில் எதிரே உள்ள மண்டபத்தில் ஸ்ரீ தேவி பூதேவி தயார் சமேத மலையப்ப சுவாமிக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறவுள்ளது.
பின்னர் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி ஏழுமலையான் கோயில் தெப்ப குளத்தில் நடைபெறவுள்ளது. இதில் பல்லாயிரகணக்காண பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்பதால் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பக்தர்கள் புனித நீராட தேவஸ்தான ஏற்பாடுகள் செய்துள்ளது. நாளை முழுவதும் தெப்பகுளத்தில் புனித நீராடலாம் என்பதால் பக்தர்கள் தள்ளுமுள்ளு இல்லாமல் தேவஸ்தான அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு அளித்து புனித நீராட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.
Leave a Comment