திருப்பதியில் மலையப்ப சுவாமி தேரில் வீதி உலா
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான நாளை காலை 7 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலீக்க உள்ள ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத மலையப்ப சுவாமி
அலைபாயும் மனதை சிதரவிடாமல் கட்டுபடுத்தி சரிரம் என்னும் ரதத்தை நல் வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி் பூதேவி தயார்களுடன் பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று காலை 7 மணி முதல் 9.30 மணி வரை மகா ரதம் எனப்படும் தேரில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் முழுங்கியபடி வடம் பிடித்து இழுக்க நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ரத உற்சவத்தின் போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுவாமியின் ரதஉற்சவத்தில் பங்கேற்று தரிசனம் செய்தால் மறு ஜன்மம் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கலியுகத்தில் துஷ்ட சக்திகளை வதம் செய்வதற்காக பாயும் தங்க குதிரை மீது பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாள் மலையப்ப சுவாமி கல்கி அலங்காரத்தில் இன்று இரவு 8 மணிக்கு பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
Leave a Comment