சரஸ்வதி பூஜை... கடவுளை வணங்க உகந்த நேரம்...


கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாளாகும். நாளை அக்டோபர் 7 ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள், புத்தகங்கள், பென்சில், பேனா போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள்.

இந்த நாளே ஆயுத பூஜை மஹாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஆயுதபூஜைக்கு நாளை பூஜைக்கான நேரம்:
மகாநவமியாக அமைந்து மிகச் சிறப்பான நாளில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
சரஸ்வதி தேவியின் புகைப்படத்தை வைத்து அதன் முன் நாம் அன்றாட வேலைக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும்.


பூஜை செய்ய காலை 9:00 - 10:00 மணிக்குள் அவல், பொரி, சுண்டல் படைத்து பூஜித்தல் மிகவும் சிறப்பானது.


அதே போல் அன்றைய நல்ல நேரம் காலை 6.15 - 7.15 மணி வரையும்


மாலை 4.45 முதல் 5.45 மணி வரை நல்ல நேரமாக அமைந்துள்ளது.


இந்த நேரத்தில் பூஜை செய்வது மிகவும் சிறப்பானது.
 



Leave a Comment