துர்காஷ்டமி - துர்க்கையை வழிபட உகந்த நாள்


மாதம்தோறும் வரும் அஷ்டமி திதியில் துர்கையை வழிபடுவது மிகவும் விசேஷம். புரட்டாசி மாதம் எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதி, மகா அஷ்டமி அல்லது துர்காஷ்டமி என்றே அழைக்கப்படுகிறது. மறுநாள் வரும் நவமி, மகா நவமியாகப் போற்றப்படுகிறது.

துர்காஷ்டமி நாளில், ராகுகால வேளையில் ஆலயங்களில் உள்ள துர்கை அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். நவராத்திரியின் எட்டாவது நாளில் துர்காஷ்டமி வருவதால், வீட்டிலும் துர்கை அம்மனை வழிபடலாம். 

வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள், துர்காஷ்டமி நாளில் எட்டு வயது நிரம்பிய சிறுமிகளை வீட்டுக்கு வரவழைத்து, அவர்களை அம்பிகையின் அம்சமாகவே பாவித்து வழிபட்டு, அவர்களுக்கு மங்கலப் பொருள்களை வழங்கினால், துர்கையின் அருளால் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.
 



Leave a Comment