உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா திருவிழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.... வீடியோ காட்சி


உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா திருவிழா  மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கி உள்ளது. 

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடங்கி வரும் அக்டோபர் 8ம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உலகம் எங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த மைசூரு தசரா விழாவை காண வருவார்கள். 

தசரா விழாவின் இறுதி நாளான அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் ஜம்பு சவாரி ஊர்வலம் மிகவும் முக்கிய அம்சம் ஜம்பு சவாரி யானைகள் ஊர்வலத்தின் போது பட்டத்து யானை அர்ஜூனா 750 கிலோ எடைகொண்ட சாமூண் டீஸ்வரி தேவியின் தங்க அம்பாரியை சுமந்து அரண்மனையிலிருந்து பன்னி மண்டபம் வரை ஊர்வலமாக செல்கிறது ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். 

ஊர்வலத்தில் பல்வேறு கலை கலாச்சார பண்பாடு நிகழ்ச்சிகள் நடக்கின்றன தசரா விழாவை எழுத்தளர் எஸ்எல் பைரப்பா துவக்கிவைக்கிறார் முதல்வர் எடியூரப்பா அமைச்சர் சோமண்ணா எம்பிக்கள் எம்எல்ஏக்கள் கலந்து கொள்கின்றனர்.  இதே போன்று மைசூரு அரண்மனையிலும் தசரா தொடக்க விழா நடைபெறுகிறது. இலவரசர் யதுவீர் அரண்மனையில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபடுவார். 

தசரா விழா தொடக்கத்தை முன்னிட்டு அரண்மனையில் கணபதி ஹோமம் நடக்கிறது. காலை 10 மணி முதல் 11 மணி வரை யதுவீர் ராஜஉடையில் 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நவரத்தினங்களால் ஜோடிக்கப்பட்ட சிம்மாசனத்துக்கு சிறப்பு பூஜை செய்து அதில் அமர்ந்து தர்பார் நடத்துகிறார்.  அரண்மனைக்கு உரிய ராஜதர்பார் மல்யுத்தப்போட்டி ஆகிய விஷயங்கள் அடுத்த 9 நடக்கிறது. அரண்மனை மின் விளக்குகளால் ஜொலிக்கும். தசரா விழாவையொட்டி மைசூரு நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.



Leave a Comment