கல்யாண வரதராஜ பெருமாளுக்கு 16 கிலோ எடையுள்ள பிஸ்தா மாலை
சென்னை திருவொற்றியூரில் சின்ன காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் 400 ஆண்டு பழமையான காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மூலவர் கல்யாண வரதராஜ பெருமாளுக்கு விஷேச புஷ்ப அலங்காரம் செய்யபட்டது.
இதனையடுத்து உத்சவர் ஸ்ரீ பவழ வண்ண பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி தாயாருக்கு 16 கிலோ எடையுள்ள பிஸ்தா மற்றும் அலங்கார பொருட்கள் கொண்டு கோர்க்கப்பட்ட மாலை முந்திரி ஜடை ,கிரீடங்கள் அணிவித்து ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இரண்டாவது சனிக்கிழமையான இன்று மஹாளய அமாவாசை ,திருப்பதி குடை ,என ஆன்மிக வாரமானதால் கட்டுக்கடங்காத கூட்டம் பெருமாளை சேவிக்க நீண்ட நேரம் வரிசையில் காந்திருந்து தரிசனம் செய்தனர்
ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க இத்திருக்கோவிலில் புரட்டாசி மாதம் நான்கு வாரங்களும் விதவிதமான மலர்கள் பழங்கள் என மாலை அணிவித்து பெருமாளுக்கு அலங்காரம் செய்வதனால் வெளிபகுதிகளில் இருந்து எராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
Leave a Comment