ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயில் உண்டியலில் காணிக்கை எண்ணப்பட்ட வீடியோ காட்சி....
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயில் 25 நாட்களில் 92 லட்சத்து 58 ஆயிரம் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள வாயு லிங்கமான ஞான பிரசுன்னாம்பிகை ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோவில் ஆகஸ்ட் மாதம் 3 தேதி முதல் நேற்று 25ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.
இந்த உண்டியல் காணிக்கை மூலமாக 92 லட்சத்து 58 ஆயிரத்து 75 ரூபாய் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இதுதவிர 98 கிராம் தங்கம், 383 கிலோ 400 கிராம் வெள்ளி பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
மேலும் அமெரிக்க 17, மலேசியா 44 , யுஏஇ 10, சிங்கப்பூர் 2, மற்ற நாடுகள் 8 என மொத்தம் 81 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் என பக்தர்கள் 25 நாட்களில் சுவாமி தரிசனம் செய்து காணிக்கையாக உண்டியலில் செலுத்தி இருந்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Comment