திருப்பதியில் நன்கொடை வழங்கினால் வி.ஐ.பி. தரிசனம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எந்தவித சிபாரிசு கடிதங்களும் இல்லாமல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஐபி தரிசனத்தில் அனுமதிக்க தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஐம்பதாவது அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு .திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அதில் பேசிய அவர்  தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக 10 கோடி ரூபாயில் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான கல்வி நிறுவனங்களில் படிக்க கூடிய மாணவ , மாணவிகளுக்காக 100 கோடி ரூபாயில் விடுதி கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின்  தண்ணீர் தேவைக்காக திருப்பதியில் பாலாஜி அணை கட்டுவதற்கு எவ்வளவு நிதி தேவை என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு  பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாஙா. 

 தேர்தல் போது தேர்தல் அதிகாரிகள் மூலமாக பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்ட 1371 கிலோ தங்கத்தை மீண்டும் ஓராண்டுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கட்டுவதற்காக தொடங்கப்பட்ட ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு எந்த வித சிபாரிசு கடிதங்களும் இல்லாமல் விஐபி தரிசனத்தில் அனுமதிக்க அறங்காவலர் குழு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எவ்வளவு நன்கொடை வழங்கினால், எத்தனை பேரை அனுமதிப்பது, ஆன்லைனில் நன்கொடை பெறுவதா, அல்லது நேரடியாக வந்து நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு வழங்குவதா என்பது  குறித்து இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.



Leave a Comment