1,00,008 வெற்றிலை அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சநேயர்
1,00,008 வெற்றிலை அலங்காரத்தில் நாமக்கல் விஷ்வரூப ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாமக்கல் நகரில் நடுநாயகமாக வீற்றிருக்கும் 18 அடி உயர விஷ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தி விழா மட்டுமின்றி தமிழ்மாதம் முதல் ஞாயிற்று கிழமை யில் பால் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்படும். கடந்த சில ஆண்டுகளாக அனுமன் ஜெயந்தி அன்று மட்டும் 1,00,008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று முதன் முதலாக 1,00,008 வெற்றிலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர் நீண்ட வரிசியில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ராமணின் வெற்றி செய்தியை இலங்கையில் அசோக வனத்தில் ராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாதேவி யிடம் முதன் முதலில் சொன்னவர் ஆஞ்சநேயர். அந்த வெற்றி செய்தியை கூறிய ஆஞ்சநேயர் க்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என என்னினால் சீதா தேவி.
பரிசு கொடுக்கதன்னிடம் எதுவும் இல்லாததால் அருகில் இருந்த வெற்றிலை கொடியில் இருந்த இலைகளை பறித்து மாலையாக தொடுத்து இதை போட்டுக் கொள் என அனுமனிடம் கொடுத்தார் சீதா தேவி. இது புராண கால வரலாறு ஆகும். இதன் காரணமாகத் தான் ஆஞ்சநேயர் க்கு வெற்றிலை மாலை அணிவித்து பெண்கள் வழிபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Comment