தொழில் மேன்மை அடைய திரிம்பகேஸ்வரர் கோயிலில் யாகம்... 


திரிம்பகேஸ்வரர் கோயில், திரிம்பாக் என்னும் நகரில் உள்ள தொன்மையான கோயில் ஆகும். இது மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சிவனுக்காக அமைக்கப்பட்ட இக்கோயில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். இங்கு மக்கள் குறைவற்ற செல்வத்துடனும், சிறப்பான வாழ்வும் வாழ சிறப்பு வேள்விகள் நடத்தி உள்ளார் வாசியோகி ஓம் பரமானந்த பாபா.

இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது திரிம்பகேஸ்வரர் கோயில். இங்குள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன.

சிறப்பு  மிக்க இத்தலத்தில் மும்மூர்த்திகள் உண்டாக்கிய குளத்தோடு கவுதம முனிவர் ஏற்படுத்திய கோதாவரி நதியும் திரியம்பகேஸ்வரம் திருக்கோவிலின் புனிதத் தீர்த்தம் ஆயிற்று. கவுதமர் செய்த கோடியர்ச்சனைக்கும், தவத்திற்கும் கருணை கூர்ந்து ஒரு நதியையே புதியதாகப் படைத்து அருளி கவுதம முனிவருக்கு அளவற்ற ஆனந்தம் அளித்த பராபரனுக்கு கவுதமேஸ்வரர் என்று திருப்பெயர் உண்டாயிற்று.

உலகம் தோன்றிய காலத்திலிருந்து கோடிக்கணக்கான ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்புரியும் அருமை பெருமை மிக்க திரியம்பகம் திருத்தலத்தை சென்று தரிசனம் செய்து வழிபடுகின்றவர்களுக்கு அவர்கள் புரியும் தொழில் சிறப்புடன் விளங்குகின்றது. வாழ்க்கையில் தண்ணீர் பஞ்சம் உண்டாவது இல்லை. வாழ்வில் அளவில்லாத ஆனந்தம் உண்டாகும். இத்தகைய சிறப்பு பெற்ற இத்தலத்தில் மக்களின் வாழ்வில் அளவில்லாத ஆனந்தம் உண்டாக பல யாகங்களை சித்தர்கள் அருளாசியுடன் செய்துள்ளார் வாசியோகி ஓம் பரமானந்த பாபா.

இத்தலத்திற்கு நேரில் செல்ல முடியாதவர்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக திரிம்பகேஸ்வரர் கோயிலில் செய்யப்பட்ட  யாகங்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாக கிடைக்கும் வகையில் கோயம்புத்தூரில் C21 / புது எண் 42, 43 சர்க்கரை செட்டியார் நகர், இஎஸ்ஐ (எதிரில்), உப்பிலிபாளையம் (போ) உள்ளது ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்திலும் நடத்தி உள்ளார்.

இதனால் இங்கு வருபவர்களுக்கு தொழில் சிறப்படைகிறது. வாழ்வில் ஆனந்தம் கிடைக்கிறது. மேலும் திருமணத்தடை, பொருளாதாரம் முன்னேற்றம் இல்லாத நிலை, குழந்தையின்மை பிரச்னை, குடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் உயர்வு கிடைக்கிறது.

யாகங்களின் பலன்கள் முழுமையாக மக்களுக்கு கிடைக்கிறது. அனைத்து செல்வங்களும் கிடைக்கிறது. இங்கு மக்கள் நலன் வேண்டியும், சித்தர்கள் அருள் பரிபூரணமாக மக்களுக்கு கிடைக்க வேண்டியும் பிரதி அமாவாசை மேரு பூஜை, பௌர்ணமி அன்று ராஜராஜேஸ்வரி பூஜை நடக்கிறது. மேலும் ஆண்கள், பெண்களுக்கு வாசி யோக பயிற்சிகள், ஆழ்நிலை தியானங்கள் கற்றுத்தரப்படுகிறது. ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். சித்தர்கள் வாக்கின் பிரகாரம் பரிகாரங்கள் செய்து வைக்கிறார். 

சுவாமிகளை சந்திக்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

தொடர்புக்கு: 63747 72550, 74490 12379.



Leave a Comment