ஸ்ரீ மூலநாதர் கோயில் கும்பாபிஷேகம்
சிதம்பரம் அருகே சம்மந்தம் கிராமத்தில் உமையபார்வதி சமேத ஸ்ரீ மூலநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள சம்மந்தம் கிராமத்தில் ஏராளமான பொருட்செலவில் ஸ்ரீ உமைய பார்வதி சமேத ஸ்ரீ மூலநாதர் கோயில் கட்டப்பட்டது. இதில் ஸ்ரீ உமையபார்வதி சமேத ஸ்ரீ மூலநாதர், ஸ்ரீ அகஸ்தியர் முதலான பதினெட்டு சித்தர்கள் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் ஆலயங்கள் எழுந்தருளியுள்ளது.
இக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது. இதையொட்டி கடந்த 5 ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்தது. தினமும் பல்வேறு பூஜைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 8 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதற்காக யாகசாலையில் இருந்து மேள வாத்தியங்கள் முழங்க கடம் ஊர்வலமாக புறப்பட்டு சென்றது. பின்னர் விமானத்தில் புனித கலச நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
Leave a Comment