காயத்ரி மந்திரத்தை சொல்லும் வழிமுறைகள்....
வேதத்தினுடைய சாரம் காயத்ரியில் அடங்கியிருக்கிறது. மானுட வாழ்க்கையின் இலட்சியத்தை அது விளக்குகிறது. காயத்ரி மந்திரம் பிரார்த்தனையாகவும், தியான சுலோகமாகவும், அமைந்திருக்கிறது. பரபிரம்மத்தின் அம்சங்களாகிய பல தெய்வங்களுக்கு பல காயத்ரி மந்திரங்கள் அமைந்திருக்கின்றன. அவைகளை தேவி காயத்ரி, ருத்ர காயத்ரி, விஷ்ணு காயத்ரி, சுப்ரமணிய காயத்ரி, கணேச காயத்ரி என பாகுபடுத்தலாம்.
இத்தனை வித காயத்ரிகளுள் நாடு முழுவதும் பல்லாண்டுகளாகப் பொதுவாக இருந்து வருகிற காயத்ரி ஒன்றேயாம். இது பிரம்ம காயத்ரி அல்லது சூரிய காயத்ரி என்று அழைக்கப்படுகிறது.
காயத்ரி மந்திரத்தை சொல்லும் வழிமுறைகள்....
* காலை 4 மணிக்கு எழுந்து நாலரை மணிக்குள் தயாராகுங்கள்.
* கிழக்கு முகமாக அமருங்கள்.
* ஞான முத்திரை பரிந்துரைக்கப்படுகின்றது.
* மந்திரத்தினை பொறுமையாய் 108 முறை சொல்லுங்கள்...
காயத்ரியை வழிபடுபவன், காயத்ரி மந்திரத்தைச் சரியாக அறிந்து உபயோகப்படுத்துகிறவர்கள் எல்லோரும் துவிஜர்கள் ஆகின்றனர். துவிஜன் என்றால் இரு பிறப்பாளன். தாயின் வயிற்றிலிருந்து பிறந்து வருவது ஒரு பிறவி. தன்னுடைய வாழ்க்கையை மேலான வாழ்க்கையாகத்திருத்தி அமைக்க ஆரம்பிக்கும் பொழுது மனிதன் ஆன்மீகத்துறையில் இன்னொரு பிறப்பு எடுத்தவன் ஆகிறான். ஆகையினால், அவன் துவிஜன்- இரு பிறப்பாளன் என்று சொல்லப்படுகிறான். அதற்குத் தூண்டுதலாக வந்தமைந்ததிருப்பது காயத்ரி மந்திரம்.
Leave a Comment