கேரளாவில் ஓணம் திருவிழா கோலாகலம் 


அசுரர்களிலேயே மக்கள் மிகவும் நேசிக்கக்கூடிய, வளமாக, திறமையாக ஆட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி, ஒவ்வொரு ஆண்டும் மக்களை வந்து பார்த்து வளமோடு, செழிப்பாக வாழ்கிறார்களா என பார்த்து செல்வதாக கொண்டாடப்பட்டு வரும் நிகழ்வு தான் ஓணம் பண்டிகை.

மலையாள சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்திலிருந்து திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் வரை கோலாகலமாக கொண்டாடடப்படும் பண்டிகை தான் ஓணம் பண்டிகை. கடைசி நாளான திருவோணம் நட்சத்திரத்தின் போது மகாபலி மக்களை காண வருவதாக கருதப்படுகின்றது.

கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான திருவிழா ஓணம். மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் பண்டிகையைாகவும், கேரள புத்தாண்டாகவும் அம்மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது. 

பத்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த ஓணம் திருவிழா கேரளாவில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. கொச்சியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய உடையணிந்த பெண்கள், 10 வகையான பூக்களைக் கொண்டு பிரமாண்ட அத்திப்பூ கோலமிட்டும் கை கொட்டியும் நடனமாடி மகிழ்ந்தனர்.

ஓணத்தின் மற்றொரு அம்சமாக விளங்கும் களி ஆட்டத்தில் பல்வேறு கடவுளர்களின் வேடம் அணிந்த கலைஞர்கள் புலிக்களி, சுவடுக்களி நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், மகாபலி மன்னனை வரவேற்று பாடும் கைகொட்டுகளி நடனத்தின் பெண்கள் இணைந்து ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அத்துடன் பாரம்பரிய இசை நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளன. 
 



Leave a Comment