விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு 


தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள்  நீர்நிலைகளில் கரைக்கப்பட்டுள்ளன.

வினாயகர் சதூர்த்தி விழா கடந்த 2 ந் தேதி கொண்டாடப்பட்டது. இந்த சிலைகளை மூன்றாம் நாளான இன்று கடலில் கரைக்கும் நிகழ்சி நடந்தது.  திண்டிவனம், மைலம், ஒலக்கூர், கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வினாயகர் சிலைகளை ஊர் வலமாக எடுத்துவரப்பட்டு மரக்காணம் அருகே கடலில் கரைக்கப்பட்டது.

தாரை, தப்பட்டை முழங்க ஆடல் பாடலுடம் ஊர் வலமாக எடுத்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகளை மரக்காணம் பகுதியில் உள்ள கைப்பாணிகுப்பம், எக்கியர்குப்பம் ஆகிய இடங்களுக்கு எடுத்துசென்றனர். இவற்றை அப்பகுதியில் இருந்த மீனவர் பஞ்சாயத்தார்கள், இளைஞர்கள் பைபர் படகுகளில் எடுத்துசென்று ஆழ்கடலில் கரைத்தனர். 

கோவை கவுண்டம்பாளையம், துடியலூர், கோவில்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. இதில் டிரம்ஸ், வயலின், கீ போர்டு வாசிக்கும் விநாயகர் சிலைகள் மக்களை பெரிதும் கவர்ந்தன. தொடர்ந்து இப்பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட சிலைகள் துடியலூரை அடுத்து உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்ட குட்டையில் கரைக்கப்பட்டன. 

மதுரை மாவட்டம் மேலூரில் கோலாகலமாகத் தொடங்கிய விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மேலூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணியின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டன. 

புதுக்கோட்டையில் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் பொதுக்குளத்தில் கரைக்கப்பட்டன. செண்டை வாத்தியம் முழங்க இளைஞர்கள் நடனமாடியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 



Leave a Comment