மும்பையில், விரைவில் திருப்பதி ஏழுமலையான் கோயில்
மும்பையில் ஏழுமலையான் கோவில் அமைப்பதற்கு மகாராஷ்டிரா மாநில அரசு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்து இருக்கிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக திட்டமிட்டுள்ளது. இதையொட்டி மும்பையில் நிலம் சேகரிக்கும் போனில் தேவஸ்தானம் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கேட்டுக் கொண்டதற்கிணங்க மும்பையில் முக்கிய சந்திப்பு கிழக்கு பந்தர் சாலையில் மகாராஷ்டிர மாநில அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்கான உத்தரவை மும்பை புறநகர் மாவட்ட கலெக்டர் மிலிண்ட் போரிக்கர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மும்பையில் ஏழுமலையான் கோவில் அமைப்பதற்காக மகாராஷ்டிர மாநில அரசு 6,975 சதுர அடி பரப்புள்ள 16 சென்ட் இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான உத்தரவு ஆணையை மகாராஷ்டிர மாநில முதல்வர் ஸ்ரீ தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தேவஸ்தான இணை செயல் அலுவலர் பசந்த்குமாரிடம் வழங்கினார்.
இதனை பெற்று கொண்ட தேவஸ்தான இணை செயல் அலுவலர் பசந்தகுமார் இந்த இடத்தில் தேவஸ்தான ஏழுமலையான் கோவில் மற்றும் தகவல் மையம் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநில நிதியமைச்சர் சுதீர் முன்ங்தீவார், தேவஸ்தான எஸ்டேட் அதிகாரிகள் விஜயசாரதி, துணை செயலாளர் விஸ்வநாத், உள்ளூர் வளர்ச்சிக்குழு உறுப்பினர் ரங்கநாதன், கீதா கஸ்தூரி ,சமத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Leave a Comment