உங்கள் தொழில் முன்னேற்றம் அடைய! சித்தர்கள் வாக்கின் பிரகாரம் பரிகாரங்கள்....


குஜராத் சோம்நாத் கோயிலில் மக்கள் நன்மைக்காக பிணிகள் நீக்கும் யாகங்கள் செய்தவர் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள்

குஜராத் மாநிலத்தின் மேற்கு கரையில் பிரபாஸ் பட்டணம் என்ற இடத்தில் அமைந்துள்ளது சோம்நாத் கோயில். இது இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது.

இங்கு ஜோதிர் லிங்கத்தின் நேர் பின்புறம் உள்ள சக்தி அம்மன், 51 சக்தி பீடங்களில் தேவியின் வயிற்றுப் பகுதி விழுந்த சக்தி பீடத்திற்குரியதாகும். மிகவும் சக்தி வாய்ந்த இடமாக இத்தலம் விளங்குகிறது.

இந்தியாவெங்கும் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் முதலாவதாக கட்டப்பட்டது என்ற சிறப்பும் இந்த கோயிலுக்கு உண்டு. ஆலயம் அமைந்திருக்கும் இந்த இடம் ஆதி காலத்தில் கபிலா, ஹிரன் மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் ஒருங்கே சங்கமிக்கும் திரிவேணி சங்கமமாக இருந்துள்ளது.

தனது 27 மனைவியரில் ரோஹிணியிடம் மட்டுமே அளவுகடந்த பாசம் வைத்து மற்றவர்களை புறக்கணித்து வந்திருக்கிறான் சந்திரன். இதனால் கோபம் கொண்ட மற்ற 26 மகள்களின் தந்தையான தட்சப்பிரசாபதி என்பவர் சந்திரன் காச நோயால் அவதிப்படட்டும் என்று சபிக்கிறார். காச நோயினால் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக தேய்ந்து வந்த சந்திரன் கடைசியாக இந்த திரிவேணி சங்கமத்தில் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றுள்ளான்.

இதன் காரணமாகவே சந்திரனின் பெயர்களுள் ஒன்றாக ‘சோமன்’ என்கிற பெயரால் இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் விளிக்கப்படுகிறார். இத்தகைய சிறப்பு பெற்ற தலத்தில் மக்கள் நலன் வேண்டியும், பிணிகள் நீங்கவும், நோயின்றி சிறப்பு வாழவும் சித்தர்கள் அருளாசிபடி சிறப்பு வேள்விகள் நடத்தி உள்ளார் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். இந்த வேள்வியின் மகிமையும், அதன் ஆற்றலும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் கோயம்புத்தூரில் C21 / புது எண் 42, 43 சர்க்கரை செட்டியார் நகர், இஎஸ்ஐ (எதிரில்), உப்பிலிபாளையம் (போ) உள்ளது ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்திலும் இதுபோன்ற வேள்விகளை நடத்தி உள்ளார்.

இங்கு வருபவர்களுக்கு பிணிகள் நீங்குகிறது. திருமணத் தடை, வேலை வாய்ப்பில் தடை, தொழில் முன்னேற்றம் இல்லாத நிலை என்று அனைத்தும் நீங்கி வாழ்வில் உயர்வு கிடைக்கிறது. முக்கியமாக குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கிறது. யாகங்களின் பலன்கள் முழுமையாக மக்களுக்கு கிடைக்கிறது. 

இங்கு மக்கள் நலன் வேண்டியும், சித்தர்கள் அருள் பரிபூரணமாக மக்களுக்கு கிடைக்க வேண்டியும் பிரதி அமாவாசை மேரு பூஜை, பௌர்ணமி அன்று ராஜராஜேஸ்வரி பூஜை நடக்கிறது. மேலும் ஆண்கள், பெண்களுக்கு வாசி யோக பயிற்சிகள், ஆழ்நிலை தியானங்கள் கற்றுத்தரப்படுகிறது. ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். சித்தர்கள் வாக்கின் பிரகாரம் பரிகாரங்கள் செய்து வைக்கிறார். 

சுவாமிகளை சந்திக்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

தொடர்புக்கு: 63747 72550, 74490 12379.



Leave a Comment