பஞ்சமூர்த்திகள் வீதி உலாவுடன் பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெற்றது....


சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் இருக்கும்  கற்பக விநாயகர் கோயிலில் ஆண்டு தோறும் ஆவணித்திங்களில் வரும் விநாயக சதுர்த்தி முக்கிய திருநாள் ஆகும். இந்த கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா பத்து நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். 

விநாயகர் சதுர்த்திக்கு ஒன்பது நாள் முன்னதாகவே காப்புக்கட்டி கொடியேற்றம் செய்து திருநாள் தொடங்கப்பெறும், இரண்டாம் திருநாளில் இருந்து எட்டாம் திருநாளில் வரை காலை விழாவில் விநாயகர் வேள்ளி கேடகத்தில் உலா வருவார். 

அதன்படி கடந்த 24ம் தேதி காலை 10.40 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. முன்னதாக விநாயகருக்கும், அங்குசத்தேவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி உற்சவ விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். 

தொடர்ந்து தினமும் விநாயகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின்ன நிறைவு நாளான நேற்று காலை விநாயகருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவுடன் பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெற்றது.
 



Leave a Comment