ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில் காட்சியளித்த ஏலேல சிங்க விநாயகர்


சக்தி தலங்களில் முதன்மையாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகில் அமைந்துள்ளது  ஏலேல சிங்க விநாயகர் திருக்கோவில். இத்திருக்கோவில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி விநாயகர் சதுர்த்தி தினமான இன்று ஏலேல சிங்க விநாயகருக்கு அதிகாலையிலேயே அபிஷேக ஆராதனைகள்  நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து விநாயகருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு  14 வது ஆண்டாக  சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான 10, 20, 50, 100, 500, 2000 உள்ளிட்ட புதிய ரூபாய் நோட்டுகளால்  சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ரூபாய் நோட்டுக்களை கொண்டு  அலங்காரம் செய்யப்பட்டு காட்சியளித்த ஏலேல சிங்க விநாயகரை அதிகாலையில் இருந்தே பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
 



Leave a Comment