பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தேரோட்டம் ..... 


பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தேரோட்டம்  வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் . இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள் திருவிழாவாக வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது ஒவ்வொரு நாளும் ரிசபம், சிம்மம், கமலம், உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஒன்பதாவது திருநாளான இன்று மாலை 4.30 மணி அளவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  தேர் வடம் பிடித்து இழுத்தனர். 

சதுர்த்தி விரதம் இருக்கும் பெண்கள் மட்டுமே இருக்கு சண்டிகேஸ்வரர் சிறிய தேரை ஏராளமான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். 

கோவிலைச் சுற்றி நான்கு வீதிகளில் வலம் வந்த திருத்தேர் மாலை 6.40 மணிக்கு நிலைக்கு வந்தது. மூலவர் சந்தனக் காப்பு அலங்காரம் வருடம் ஒரு முறை மட்டும் நடக்கும் என்பதால் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விழா ஏற்பாடுகளை பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் நகர டிரஸ்டிகள் செய்துள்ளனர். நாளை 10 வது திருநாளான விநாயகர் சதுர்த்தி கோவில் தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இரவு பஞ்சமூர்த்தி திருவீதி உலாவுடன் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெரும். 



Leave a Comment