சுவையான வெள்ளை எள் உருண்டை
தேவையான பொருட்கள்:
வெள்ளை எள் - 2 கிண்ணம்
வேர்க் கடலை - 2 கிண்ணம்
வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில், எள் மற்றும் வேர்க்கடலையை தனித்தனியாக வறுத்து வைத்துக் கொள்ளவும். பின் வெல்லத்தை நன்கு தட்டிக் கொள்ளவும். பின்பு வறுத்து வைத்துள்ள எள் மற்றும் வேர்க்கடலையை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு அதில் தட்டி வைத்துள்ள வெல்லத்தை போட்டு, அரைத்துக் கொள்ளவும். (வேண்டுமென்பவர்கள் எள்ளை அரைத்தும் செய்யலாம், அரைக்காமலும் செய்யலாம்.) பின் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஏலக்காய் சேர்த்து, உருண்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும். சுவையான எள்ளுருண்டை ரெடி
Leave a Comment